வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை வனத்துறையினர் எச்சரிக்கை
ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரத்தை சுற்றி கேர்ன்ஹில், லவ்டேல், மஞ்சனக்கொரை, தமிழகம், தீட்டுக்கல் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் கடமான், காட்டெருமை, காட்டுப்பன்றி, கேளை ஆடு, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியை ஒட்டியுள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் காட்டெருமைகள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
அங்கு பசுமை போர்வை போர்த்தியது போல் அடர்ந்து வளர்ந்த உயர்ந்த மரங்களில் அரியவகை பறவைகளும் காணப்படுகின்றன. இந்த வனப்பகுதியில் தெற்கு வனக்கோட்டம் சார்பில், சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில், வனத்துறை சார்பாக தொங்கு பாலம், மரங்களில் சிறுத்தைப்புலி உட்கார்ந்து இருப்பது போன்ற தத்ரூப பொம்மை, நல்ல பாம்பு ஒன்று பாம்பு புற்று அருகில் நிற்பது போலவும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. முன்பகுதியில் காட்டெருமை, மான், புலி, சிறுத்தைப்புலி ஆகியவற்றின் உருவ பொம்மைகள் நிஜ வன விலங்குகளை போல் பிரமிக்க வைக்கிறது.
மேலும் இங்கு அடர்ந்த வனப்பகுதியை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில், காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பறவைகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்த பட்டுள்ளதுடன், அதன் அருகே உள்ள பட்டனை அழுத்தினால் அந்த பறவை எழுப்பும் ஒலி கேட்கும். இதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் விரும்பி கேட்கின்றனர்.
கேர்ன்ஹில் வனப்பகுதியில் காட்டெருமைகள் கூட்டம், கூட்டமாக மேய்ந்து வருவதையும் காண முடிகிறது. அந்த கூட்டத்தில் காட்டெருமை ஒன்று, மரங்களுக்கு நடுவே தனது குட்டிக்கு பாசத்துடன் பால் கொடுத்து கொண்டு இருந்தது. இந்த காட்சியை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், அருகில் சென்று செல்போன் களில் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் காட்டெருமை சுற்றுலா பயணிகளை தாக்கும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து வனத்துறை யினர் கூறும்போது, வனப்பகுதியில் வாழ்ந்து வரும் வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் தூரத்தில் நின்றபடி கண்டு ரசிக்க வேண்டும். அருகில் செல்லக்கூடாது. வனவிலங்குகளுக்கு இடையூறாகவோ அல்லது உணவளிக்கவோ கூடாது. மேலும் அதன் அருகே சென்று தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதையும், தொந்தரவு செய்வதையும் சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும். இதனை மீறும் சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.