தாலுகா அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்தது பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்தது பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

Update: 2017-12-07 22:45 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பல்வேறு பணிக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் 8 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு தாலுகா அலுவலகத்திற்குள் புகுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தாசில்தார் முரளிகுமார் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்து ஆலங்காயம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். 

மேலும் செய்திகள்