கிராமத்தில் பணி நல பொறுப்பாளரை மாற்றுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பணி நல பொறுப்பாளரை மாற்றுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2017-12-07 22:45 GMT
வரதராஜன்பேட்டை,

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் பெரியகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் பணி நல பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மோகன்தாசிற்கு பதிலாக வேறு ஒரு நபரை நியமிக்க இருந்தது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தபட்ட அதிகாரிகளை கண்டித்து நேற்று பெரியகிருஷ்ணாபுரம் ஆண்டிமடம்-காடுவெட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிமடம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் நித்யா, ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேச்சுவார்த்தையில், பணி நல பொறுப்பாளராக மோகன்தாஸ் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இதைதொடர்ந்து பணி நல பொறுப்பாளராக தொடர்ந்து மோகன்தாஸ் நீடிப்பார் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்