நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகம்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த விழி ஒளி பரிசோதகர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்பட 11 வகையான பட்டயப்படிப்புகளுக்கு நேற்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

Update: 2017-12-07 21:00 GMT

நெல்லை,

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த விழி ஒளி பரிசோதகர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் உள்பட 11 வகையான பட்டயப்படிப்புகளுக்கு நேற்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன.

நெல்லை மருத்துவ கல்லூரியில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் விண்ணப்பங்களை வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அப்போது கல்லூரி துணை முதல்வர் ரேவதி பாலன் உடன் இருந்தார்.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.300 ஆகும். தாழ்த்தப்பட்டவர்கள் அதற்கான சான்றிதழ்களை கொடுத்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகின்றன. அரசு விடுமுறை நாட்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படாது. வருகிற 15–ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 16–ந் தேதி மாலை 5 மணிக்குள் சென்னையில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் செய்திகள்