தொட்டிமடை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தொட்டி மடை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெய்க்காரப்பட்டி,
பழனியை அடுத்தபெருமாள் புதூர் அருகே உள்ள சண்முகம் பாறையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தொட்டி மடை நீர்வீழ்ச்சி அமைந்துள் ளது. சண்முகம் பாறையில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு செல் லும் வழியில் சாலையின் இருபுறமும் தேக்கு, தென்னை, வாழை மரங்கள் நிறைந்து பசுமையாக காட்சியளிக் கிறது.
பழனி நகரில் நிலவும் வெப்பநிலை துளியும் இல்ல ாமல் அப்பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதயத்தை வருடும் இதமான சூழ்நிலை அங்கு நிலவும். ஆனால் இங்கு செல்கிற சாலை குண்டும், குழியுமாகவே காட்சி அளிக்கிறது. கரடு முரடான சாலையை கடந்து சென்றால் இமைகளை விரிய வைக்கும் வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரமாண்டமாக அழகை பார்த்து ரசிக்கலாம்.
இதுமட்டுமின்றி மலை அடிவாரத்தில் வெள்ளி முத்துக்களை சிதறவிட்டதை போல் தொட்டிமடை நீர்வீழ்ச் சியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள கரடுப்பகுதி யில் இந்த நீர்வீழ்ச்சி தோன்றுகிறது. அங்கிருந்து பெருக் கெடுக்கும் தண்ணீர் அடி வாரம் பகுதியில் இயற்கையாக தொட்டி போல் அமைந்த இடத்துக்கு வந்து அங்கிருந்து நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது.
ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் கொட்டும். மழைக் காலங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு தண்ணீர் கொட்டும். எனவே தொட்டிமடை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக மாற்றினால் அரசுக் கும் வருமானம் கிடைக்கும். சுற்றுலா பயணிகளுக்கும் இயற்கையின் அழகை முழுமை யாக பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றனர்.
தொட்டிமடை நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு மூலிகை செடிகளை கடந்து வருகிறது. இதனால் அந்த நீர் சுவையாக உள்ளது. அதில் குளிப்பவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதுடன், மனதுக்கும் அமைதி கிடைப்பதாக அங்கு குளியல் போட்ட சிலர் தெரிவித்தனர்.
தொட்டிமடை நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்கள் அங்கு குளம் போல் தேங்கி இருக்கும் தண்ணீரில் குளித்து மகிழ லாம். ஆனால் அப்பகுதி யில் வனவிலங்குகள் நடமாட்டமும் இருக்கும். குறிப்பாக யானைகள் கூட்டம், கூட்டமாக தண்ணீர் குடிப்பதற்காக அங்கு அடிக்கடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்கள் சற்று கவன முடன் இருக்க வேண்டும்.
தொட்டிமடை நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அம்மாபட்டிகுளம், குமாரசமுத்திரகுளம், உடைய குளம், அதிகாரி குளம் உள்பட நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து குளங்களுக் கும் செல்கிறது. இதனால் அந்த குளங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் இந்த நீர்வீழ்ச்சி விளங்குவது குறிப் பிடத்தக்கது.