மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக தேர்வுகள் 15–ந் தேதி தொடங்குகிறது

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக தேர்வுகள் வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது.

Update: 2017-12-07 20:30 GMT

பேட்டை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக தேர்வுகள் வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கோவிந்தராஜூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தேர்வு மையங்கள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்கக தேர்வுகள் வருகிற 15–ந் தேதி தொடங்கி, 30–ந் தேதி வரை நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாணவ– மாணவிகளுக்கு கீழ்க்கண்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும்.

நெல்லை– மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி.

தென்காசி– இந்து மேல்நிலைப்பள்ளி, கீழப்புலியூர், தென்காசி.

பாபநாசம்– திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம்.

புளியங்குடி– அன்னை மீனாட்சி பி.எட். கல்லூரி, டி.என்.புதுக்குடி, புளியங்குடி.

சுரண்டை– சேர்மத்தாய் வாசன் மேல்நிலைப்பள்ளி, சுரண்டை.

புளியரை– டி.பி.கே. ஆங்கிலப்பள்ளி, கட்டளைகுடியிருப்பு.

தெற்கு கள்ளிகுளம்– தட்சணமாற நாடார் சங்க கல்லூரி, தெற்கு கள்ளிகுளம்.

சங்கரன்கோவில்– ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில்.

தூத்துக்குடி– செயிண்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம், தூத்துக்குடி.

சாத்தான்குளம்– மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரி, சாத்தான்குளம்.

கோவில்பட்டி– விசுவகர்மா உயர்நிலைப்பள்ளி, கோவில்பட்டி.

நாகர்கோவில்– ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, நாகர்கோவில்.

மார்த்தாண்டம்– நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி, மார்த்தாண்டம்.

அனுமதிச்சீட்டு

தேர்வு அட்டவணை, தேர்வு மையம் மற்றும் தேர்வு அனுமதிச்சீட்டு ஆகியன பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வு அனுமதிச்சீட்டை (www.msuniv.ac.in) என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் DD&CE December 2017 Exam Hall Ticket என்பதில் உள்ளீடு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு அனுமதிச்சீட்டு மற்றும் தொலைநெறி தொடர்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்