இறைச்சிக்கழிவு கலப்பதால் துர்நாற்றம் வீசும் சிறுநாயக்கன்குளம்
சிறுநாயக்கன்குளம், இறைச்சிக்கழிவு கலப்பதால் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது.
பழனி,
பழனி நகரை ஒட்டி சிறுநாயக்கன்குளம் உள்ளது. பழனியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையோரத்தில் உள்ள இந்த குளத்துக்கு வையாபுரி குளத்தில் இருந்து தண்ணீர் வருகிறது. மேலும் பழனி நகரில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சிறுநாயக்கன்குளத்தில் கலக் கிறது. இதுமட்டுமின்றி சிறுநாயக்கன்குளத்தின் கிழக்குகரை பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக குளம் மாசடைந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக குளம் திகழ்கிறது.
சிறுநாயக்கன்குளத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் பழைய தாராபுரம் சாலை செல்கிறது. குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் வசிப்போருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சிறுநாயக்கன்குளத்தில் இறைச்சி கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.