தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில், தாலுகா வாரியாக இன்று(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ள கிராமங்களின் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.

Update: 2017-12-07 21:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், தாலுகா வாரியாக இன்று(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ள கிராமங்களின் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

அம்மா திட்ட முகாம்

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் அதிக சேவை வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட திட்டம் அம்மா திட்டம். இந்த முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க உள்ளது.

இதன்படி, தூத்துக்குடி தாலுகாவில் கட்டாலங்குளம் கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் தன்னூத்து கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் வீரமாணிக்கம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகு£வில் அரசூர் பகுதி –1 கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் கிழவிபட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் கீழவிளாத்திகுளம் பகுதி–2 கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் என்.வேடப்பட்டி கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் எஸ்.குமாரபுரம் கிராமத்திலும், கயத்தார் தாலுகாவில் வடக்கு வண்டானம் கிராமத்திலும் இன்று அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது.

மனுக்கள் கொடுக்கலாம்

இந்த முகாம்கள் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்கும். முகாமில், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்