அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2017-12-06 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் சார்பில் தூத்துக்குடி போல்பேட்டை பகுதி செயலாளர் பி.எஸ்.கே.மாரியப்பன் தலைமையில் தி.மு.க.வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தெற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கதிர்வேல், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் அம்பேத்கார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில துணை பொதுச் செயலாளர் கண்ணன், தென்மண்டல செயலாளர் மனோகர் ஆகியோர் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் மாநில அமைப்பு செயலாளர் அருந்ததி அரசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொழிலாளர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட அம்பேத்கர் மக்கள் தேசிய இயக்கம் மாவட்ட செயலாளர் ரகுநாதன் தலைமை தாங்கி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ், மாநில துணை பொதுச் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாவட்ட லோக்ஜனசக்தி கட்சி சார்பில் தூத்துக்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட தலைவர் சுகுமாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும் செய்திகள்