நெல்லையில் வங்கி காசாளர் வீட்டை உடைத்து 57 பவுன் நகைகள்-பணம் கொள்ளை
நெல்லையில், வங்கி காசாளர் வீட்டை உடைத்து 57 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை வடக்கு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சிவசாமி(வயது 48). இவர் சங்கரன்கோவில் டவுனில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புவன சுகந்தா(38). இவர்களுக்கு கீர்த்தனா(15), மதுமதி(7) என்ற பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு சிவசாமி ஒரு அறையிலும், அவரது மனைவி, குழந்தைகள் மற்றொரு அறையிலும் தூங்கிக்கொண்டு இருந்தனர்.நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் சிவசாமி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் நைசாக நுழைந்தனர். அப்போது மழை பெய்து கொண்டு இருந்ததால், கதவை உடைத்த சத்தம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சிவசாமிக்கு கேட்கவில்லை.
உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அலமாரியின் பூட்டை உடைத்து அதில் இருந்த 57 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, நகைகள் வைத்து இருந்த பையை வீட்டுக்கு முன்பு தூக்கி எறிந்து விட்டு வீட்டின் முன்பக்கம் நிறுத்தி இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அதில் ஏறி கொள்ளையர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
தங்களது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் பற்றி எதுவும் அறியாத சுகந்தா காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள் சென்று அங்கு வைத்து இருந்த நகைகளை பார்த்தார். அங்கு நகைகள் எதுவும் இல்லை. உடனே தனது கணவரை எழுப்பி, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி கூறினார். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.11½ லட்சம் ஆகும்.
இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, பாளையங்கோட்டை உதவி கமிஷனர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த வீட்டிற்கு மோப்பநாய் “புளூட்டோ“ வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டை மோப்பம் பிடித்து விட்டு மெயின் ரோட்டில் போய் நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கைரேகைகள், பழைய குற்றவாளிகளின் கைரேகைகளில் ஒத்துப்போகிறதா? என போலீசார் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.
வங்கி காசாளர் தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.