ஆறுமுகநேரியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது

ஆறுமுகநேரி,
நீதிமன்ற தீர்ப்பின்படி ராமஜென்ம பூமியை இந்துக்களிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில், ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேலன், மாவட்ட செயலாளர்கள் கசமுத்து, சீதாராமன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் குற்றாலநாதன், ஒன்றிய தலைவர் ஜெயசிங், செயலாளர் ஜெகன், நகர தலைவர் சேர்மத்துரை, சுடலைமுத்து, சுந்தரவேல், முத்துசுந்தரம், சிங்காரபாண்டி, பாலகிருஷ்ணன், இசக்கி, சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 45 பேரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி, ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் தலைமையில் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.