நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவிப்பு

தஞ்சையில் நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2017-12-06 22:45 GMT
தஞ்சாவூர்,

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் மறியல் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், சேவாதள முன்னாள் மாநில அமைப்பாளர் கோவி.மோகன், மாவட்ட பொருளாளர் பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆதிதமிழர் பாதுகாப்பு பேரவை சார்பில் அதன் தலைவர் பொன்.ரெங்கசாமி தலைமையில் துணைத் தலைவர் வீரமணி, பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல தலைவர் கிட்டு தலைமையில் மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, மாவட்ட பொருளாளர் விடுதலைவேந்தன் ஆகியோர் முன்னிலையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி

அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்கராசு தலைமையில் மாவட்ட செயலாளர் பிச்சைக்கண்ணு, மாநகர மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் போராளி தலைமையில் மாநகர செயலாளர் வெற்றி, மாநில நிர்வாகி பாலராஜராஜசோழன் ஆகியோர் முன்னிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவையாறு

திருவையாறு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவையாறு பஸ் நிலையத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதை தொடர்ந்து ஆச்சனூர் கிராமத்தில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். இதே போல திருவையாறு பஸ் நிலையத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் பிரசாத் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகரச்செயலாளர் கவிசோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்