கூடுவாஞ்சேரியில் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி
கூடுவாஞ்சேரியில் லாரி மோதி 2 வாலிபர்கள் இறந்தனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம் காமராஜபுரம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். மேலும் விஜய் மக்கள் இயக்க இளைஞரணி தலைவராகவும் இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (22). மீன் வியாபாரம் செய்து வந்தார். 2 பேரும் உறவினர்கள் ஆவார்கள்.
இருவரும் கூடுவாஞ்சேரியில் இருந்து மறைமலைநகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். சீனிவாசபுரம் அருகே சென்ற போது கன்டெய்னர் லாரி கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 பேரும் பலி
இதில் மணிகண்டன், பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இது பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.