புதுக்கோட்டை, அறந்தாங்கியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அறந்தாங்கியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-12-06 22:45 GMT
புதுக்கோட்டை,

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நேற்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் பாத்திமாகனி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்கள். இதைப்போல அறந்தாங்கி பஸ் நிலையம் அருகேயும் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமது சாதிக் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் துரை முகம்மது தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிப், துணை செயலாளர் முகம்மது ஜான் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிழக்கு மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்