சம்பளம் வழங்ககோரி விருதுநகர் நகராட்சி ஆணையரை ஊழியர்கள் முற்றுகையிட்டனர்
விருதுநகர் நகராட்சியில் அலுவலக ஊழியர்கள் நேற்று ஆணையர் சந்திரசேகரனை முற்றுகையிட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சியில் அலுவலக ஊழியர்களுக்கு 2 மாதமாக சம்பள பட்டுவாடா செய்யவில்லை என்றும், உடனடியாக சம்பள பட்டுவாடா செய்ய வலியுறுத்தியும் அலுவலக ஊழியர்கள் நேற்று ஆணையர் சந்திரசேகரனை முற்றுகையிட்டனர். ஆணையர் சந்திரசேகரன் நிதி பற்றாக்குறை காரணமாகவே சம்பள பட்டுவாடா தாமதம் ஆனதாக தெரிவித்ததுடன், வரி வசூலை விரைவுபடுத்தி சம்பள பட்டுவாடா செய்ய ஒத்துழைக்குமாறு அலுவலர்களை கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.