சேலத்தில் பரிதாபம் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
சேலத்தில் 3 மனைவிகளும் பிரிந்து சென்றதால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
சூரமங்கலம்,
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா(வயது 45), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு நூர்ஜகான் என்ற பெண்ணை திருமணம் செய்தார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, நூர்ஜகான் பிரிந்து சென்று விட்டார்.
அதைத்தொடர்ந்து சாதிக்பாட்ஷா, பூங்கொடி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பர்வீன் பானு(11), நசீர் பாட்ஷா(8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சாதிக் பாட்சாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே பூங்கொடியும் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு ஜாபிதா என்பவருடன் சாதிக்பாட்சாவுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கமால்பாட்ஷா(7) என்ற மகன் உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாபிதாவும் வேறு ஒருவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைகள் சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கியிருந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாதிக் பாட்ஷா தனது 3 குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
3 மனைவிகளை திருமணம் செய்தும் ஒருவரும் தன்னுடன் வாழவில்லையே என்ற மனவேதனையில் சாதிக்பாட்ஷா காணப்பட்டார். மேலும் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தனக்கு பிறகு குழந்தைகளை யார் பாதுகாப்பார்கள்? என்று அவர் எண்ணினார்.
இந்த நிலையில் சாதிக்பாட்ஷா நேற்று காலை வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதையடுத்து அவர் விஷத்தை தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் கொடுத்தார். சிறிது நேரத்தில் 3 குழந்தைகளும் வீட்டு முன்பு வாந்தி எடுத்ததுடன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதை கவனித்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர்.
அப்போது வீட்டுக்குள் சாதிக்பாட்ஷாவும் மயங்கி கிடந்தார். அவர் அருகே விஷபாட்டில் கிடந்ததால், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் செல்லும் வழியிலேயே சாதிக்பாட்ஷா பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 குழந்தைகளுக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.