தங்கைக்கு கடன் கொடுத்ததால் ஆத்திரம் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது

தங்கைக்கு கடன் கொடுத்த கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-05 21:45 GMT

தானே,

தங்கைக்கு கடன் கொடுத்த கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

மர்மச்சாவு

தானே கல்வாவை சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி ஆஷா (வயது28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று கணவர், மனைவி இருவரும் நவிமும்பை மகாபேயில் உள்ள சஞ்சயின் சகோதரர் வீட்டிற்கு சென்றிருந்தனர். மறுநாள் அங்கு சஞ்சய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கொலை

அப்போது அவர் தான் கணவரை கொலை செய்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. கொலை தொடர்பாக வெளியான தகவல்கள் வருமாறு:–

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் சஞ்சய் தனது சகோதரி ஒருவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து உள்ளார். இதுபற்றி அவர் ஆஷாவிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் இது எப்படியோ ஆஷாவுக்கு தெரிந்து விட்டது. இதனால் கோபம் அடைந்த அவர், கணவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.

சம்பவத்தன்று இரவு கணவரை அழைத்துக்கொண்டு மகாபேயில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு வந்தார். ஆனால் அப்போது அவரது சகோதரர் வீட்டில் இல்லை. அங்கு இருவருக்குள் மீண்டும் சண்டை வந்துள்ளது. இதில், அத்திமடைந்த ஆஷா கணவரை கழுத்தை நெரித்து கொன்று இருக்கிறார்.

இந்த தகவல் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஆஷாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்