புனே அருகே அரை நிர்வாண கோலத்தில் சிறுமி பிணமாக மீட்பு கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?
புனே அருகே அரை நிர்வாண கோலத்தில் சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
புனே,
புனே அருகே அரை நிர்வாண கோலத்தில் சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
சிறுமி மாயம்புனே மாவட்டம் சகான் பகுதியை அடுத்த தமானி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கோமல் சாந்தாராம். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது தாயாருடன் அருகில் உள்ள தங்கள் வயலுக்கு சென்றிருந்தார். அப்போது, சிறுமியின் தோழி அவரை செல்போனில் அழைத்தார். இதைத்தொடர்ந்து, தோழியை சந்திப்பதற்காக கோமல் சாந்தாராம் சென்றார்.
திரும்பி வரும்போது குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு அவரிடம் தாயார் கூறினார். இருப்பினும், கோமல் சாந்தாராம் திரும்பி வரவில்லை. தாயார் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டிலும் அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மகளை தேடி பல்வேறு இடங்களில் அலைந்தார். எனினும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி சகான் போலீசில் புகார் செய்தனர்.
பிணமாக மீட்புஇந்த நிலையில், 2 நாட்களுக்கு பின்னர் அதே வயலுக்கு அருகாமையில் திறந்தவெளியில், கோமல் சாந்தாராம் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனை அவரது சகோதரர் பார்த்து பதறிப்போனார். குடும்பத்தினர் ஓடிவந்து சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமி பிணமாக கிடந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு செல்போனும், அவரது ஆடையின் சில பகுதிகளும் கிழிந்து கிடந்தன. எனவே அவர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
30 தொழிலாளர்களிடம் விசாரணைஎனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையான விவரம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். சிறுமி பிணமாக கிடந்த வயலுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை பார்த்து வரும் சுமார் 30 தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மாயமான சிறுமி 2 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.