தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சகன் புஜ்பாலின் ரூ.20 கோடியே 41 லட்சம் சொத்துகள் முடக்கம்

சகன் புஜ்பாலுக்கு சொந்தமான ரூ.20 கோடியே 41 லட்சம் மதிபிலான சொத்துகளை முடக்குவதாக அமலாக்க பிரிவினர் நோட்டீஸ் அனுப்பினர்.

Update: 2017-12-05 22:00 GMT

மும்பை,

பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சகன் புஜ்பாலுக்கு சொந்தமான ரூ.20 கோடியே 41 லட்சம் மதிபிலான சொத்துகளை முடக்குவதாக அமலாக்க பிரிவினர் நோட்டீஸ் அனுப்பினர்.

சகன் புஜ்பால்

மராட்டியத்தில் முந்தைய காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை மந்திரியாக பதவி வகித்தார். தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான இவர், டெல்லியில் ‘மகாராஷ்டிரா சதன்’ (விருந்தினர் மாளிகை) கட்டியதில் பல கோடிக்கணக்கான ரூபாய் ஊழல்புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மும்பை கலினா நில அபகரிப்பு புகாரிலும் சகன் புஜ்பால் பெயர் அடிபட்டது. அவர் மீது பணமோசடி தடுப்பு சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சொத்துகள் முடக்கம்

இந்தநிலையில், சகன் புஜ்பாலுக்கு சொந்தமான ரூ.20 கோடியே 41 லட்சம் மதிப்பிலான சொத்துகளை முடக்குவதாக அமலாக்க பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை இந்த வழக்கின்கீழ், ரூ.178 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்