உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கக்கோரி திருவிடைமருதூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-05 22:45 GMT
திருவிடைமருதூர்,

உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கக்கோரி திரு விடைமருதூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தர்மாம்பாள், சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும், உயர் கல்வியில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த வேண்டும்.

புதிய சட்டம்

மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகள்