அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலகத்தை மாணவர் சங்கத்தினர் முற்றுகை
அரசு பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகத்தை மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டகாரர்களுக்கும்- போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்,
அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தனியார் பள்ளி கட்டண உயர்வை தடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் விளமல் கல்பாலத்தில் இருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட பேரணியாக புறப்பட்டனர். பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜன் தொடங்கி வைத்தார். பேரணி தஞ்சை சாலை வழியாக சென்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக அலுவலக வாசல் கதவை மூடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது இந்திய மாணவர் சங்கத்தினர் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், மாணவர் சங்கத்தினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் கவிநிலவன், மணிகண்டன், மதன், சுர்ஜித், முகேஷ்கண்ணன், வெங்கடேசன், அன்பழகன், சத்தியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி வளாக கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர், மின்வசதி செய்து தர வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதனை சந்தித்து மனு அளித்தனர்.