சீர்காழியில், தற்காலிக கட்டிடத்தில் செயல்படும் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
சீர்காழியில் தற்காலிக கட்டிடத்தில் செயல்படும் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.
சீர்காழி,
நாகை மாவட்டம், சீர்காழியில் புதிய பஸ் நிலையம் எதிரே தாலுகா அலுவலகம் இருந்தது. இந்த கட்டிடத்தில் தாசில்தார் அலுவலகம், தனி தாசில்தார் அலுவலகம், சமூகநலத்துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டன. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், கட்டிடம் சேதம் அடைந்ததாலும் கடந்த வாரம் முதல் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக சீர்காழியில் உள்ள திருஞானசம்பந்தர் திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தாலுகா அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர், அங்கு இருந்த தாசில்தார் பாலமுருகனிடம் தாலுகா அலுவலகத்தை தூய்மையாக பராமரிக்கவும், அங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புதிதாக கழிவறை கட்டிடம் கட்டவும் கேட்டு கொண்டார். தொடர்ந்து அங்குள்ள தனி தாசில்தார் அலுவலகம், நில அளவை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களை பார்வையிட்டார். அப்போது தாலுகா அலுவலக ஊழியர்களிடம், தற்காலிக கட்டிடத்தின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, சமூகநல துறை தாசில்தார் ராம்குமார், தனி தாசில்தார் பிரேம்சந்திரன் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.