தாம்பத்தியத்தில் ஈடுபட மறுக்கும் மனைவி, திருநங்கையா? என கண்டறிய பரிசோதனைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் கணவர் மனு
தாம்பத்தியத்தில் ஈடுபட மறுக்கும் மனைவி ஆணா?, பெண்ணா? அல்லது திருநங்கையா? என்று கண்டறிய பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி;
மைசூரு,
தாம்பத்தியத்தில் ஈடுபட மறுக்கும் மனைவி ஆணா?, பெண்ணா? அல்லது திருநங்கையா? என்று கண்டறிய பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் கணவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பத்தியத்தில் ஈடுபட மறுப்புமைசூருவை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு(2016) திருமணம் நடந்தது. இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மைசூருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. திருமணம் முடிந்த பிறகு புதுமண தம்பதி தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர்.
ஆனால் திருமணம் முடிந்ததில் இருந்து கணவன், மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவு இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது அந்த வாலிபர் தனது மனைவியிடம் சென்றாலும் அவர் தாம்பத்தியத்தில் ஈடுபட சம்மதிக்காமல் தள்ளியே இருந்துள்ளார் என்றும், தனது ஆசைக்கு இணங்கும்படி அந்த வாலிபர் கேட்கும்போதெல்லாம் அந்த பெண் தாம்பத்தியத்தில் ஈடுபட மறுத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.
நீதிபதி உத்தரவுகடந்த ஓராண்டாக கணவன், மனைவிக்கு இடையே தாம்பத்திய உறவு இல்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி தன்னிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட மறுக்கிறார் என்றும், அதனால் அவர் ஆணா?, பெண்ணா? அல்லது திருநங்கையா? என்று பரிசோதனை செய்திட உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மைசூரு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பெண்ணுக்கு நோட்டீசுஇந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த வாலிபர் நேற்று பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் மீண்டும் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது மனைவி தன்னிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட மறுக்கிறார் என்றும், அதனால் அவர் ஆணா?, பெண்ணா? அல்லது திருநங்கையா? என்று பரிசோதனை செய்திட உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த பெண்ணுக்கு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டார்.
பரபரப்புஇந்த நிலையில் அந்த பெண்ணும் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனக்கு தனது கணவர் பாலியல் தொல்லை கொடுத்தும், கூடுதல் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்துவதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் அதை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
ஓராண்டாக தாம்பத்திய உறவில் ஈடுபட மறுக்கும் மனைவி ஆணா?, பெண்ணா? அல்லது திருநங்கையா? என்று கண்டறிய பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி கணவர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கும் சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.