அரியலூர் அருகே கோவில் வாசலில் கிடந்த ஆண் குழந்தை

அரியலூர் அருகே கோவில் வாசலில் கிடந்த ஆண் குழந்தை

Update: 2017-12-05 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோவில் தெற்கு வாசலில் நேற்று காலை 7 மணியளவில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள், இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த குழந்தையை கைப்பற்றி விசாரித்த போது அது பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் குழந்தையை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்குபேட்டரில் குழந்தையை வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த குழந்தையின் தாய்-தந்தை யார்? என்பன உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் இந்த குழந்தை சேர்க்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்