சேலத்தில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
சேலம்,
சேலம் மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சேலத்தில் பன்னாட்டு நிறுவனம் தன்னிச்சையாக வாகன கட்டணம் அறிவித்து பல குளறுபடியில் ஈடுபட்டுள்ளது என்றும், கட்டணம் நிர்ணயம் செய்யும் முறை அரசுக்கு மட்டுமே உண்டு என்றும், அசல் உரிமம் என்ற பெயரில் ஆட்டோ டிரைவர்களிடம் முறையற்ற வகையில் நடந்து கொள்ளும் காவல்துறையை கண்டித்தும், நியாயமான மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், எல்.பி.எப். தொழிற்சங்கத்தை சேர்ந்த மணிவண்ணன், ரவிச்சந்திரன், தேசிய முற்போக்கு ஆட்டோ தொழிற்சங்க தலைவர் வடிவேல் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த குணசேகரன், மணிமாறன், அப்துல்சமது உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.