தேவூர் அருகே ரே‌ஷன் கடையில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

தேவூர் அருகே கத்தேரி ஊராட்சி வட்டமலை பகுதியில் ரே‌ஷன்கடை இயங்கி வருகிறது. அந்த கடை விற்பனையாளர் தனபால் நேற்று காலையில் கடைக்கு வந்தார். அப்போது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.;

Update: 2017-12-05 22:45 GMT

தேவூர்,

தேவூர் அருகே கத்தேரி ஊராட்சி வட்டமலை பகுதியில் ரே‌ஷன்கடை இயங்கி வருகிறது. அந்த கடை விற்பனையாளர் தனபால் நேற்று காலையில் கடைக்கு வந்தார். அப்போது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த 21 கிலோ சர்க்கரை, 7 லிட்டர் பாமாயில், 14 கிலோ துவரம் பருப்பு, அரிசி 50 கிலோ, பச்சரிசி 50 கிலோ மற்றும் எலக்ட்ரானிக் தராசு, ரொக்கம் 300 ரூபாய் ஆகியவற்றை நள்ளிரவில் மர்ம நபர்கள் கடை பூட்டை உடைத்து திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து கடை விற்பனையாளர் தனபால் தேவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.7 ஆயிரத்து 500 ஆகும்.

மேலும் செய்திகள்