தாயுடன் ஏற்பட்ட சண்டையில் 10–ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி தற்கொலை

தாயுடன் ஏற்பட்ட சண்டையில் 10–ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2017-12-04 22:31 GMT

தானே,

தானே பிவண்டியை சேர்ந்தவர் குடியா. இவரது மகன் ஹிருத்திக்(வயது17). அங்குள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்றுமுன்தினம் தாய், மகன் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், கோபம் அடைந்த குடியா மகனை திட்டி உள்ளார்.

இதில், மனமுடைந்த ஹிருத்திக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது வயிற்றில் சரமாரியாக குத்திக்கொண்டான. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து வேதனையில் துடித்தான்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஹிருத்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தாயுடன் சண்டையிட்டு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்