ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டது.

Update: 2017-12-04 22:26 GMT

புனே,

புனே ராம்நகர் கிராம பஞ்சாயத்து பகுதியில் இரும்பு தொழில் தொடங்குவதற்கு தடையில்லா சான்று வாங்க 22 வயது வாலிபர் ஒருவர் கிராமநிர்வாக அதிகாரி உல்லாஸ் சாந்தாராமை(வயது35) அணுகினார். கிராம நிர்வாக அதிகாரி தடையில்லா சான்று வழங்க வாலிபரிடம் ரூ.7 ஆயிரம் கேட்டார். வாலிபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கொடுத்த யோசனையின் படி வாலிபர் புனே– சத்தாரா ரோட்டில் உள்ள ஓட்டல் முன் வைத்து கிராமநிர்வாக அதிகாரியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்ச பணத்துடன் கிராமநிர்வாக அதிகாரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்