கர்நாடக மாநிலம் முழுவதும் சித்தராமையா சுற்றுப்பயணம் பீதரில் 13-ந்தேதி தொடங்குகிறார்

விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடக மாநிலம் முழுவதும் முதல்-மந்திரி சித்தராமையா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.;

Update: 2017-12-03 23:31 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

காங்கிரசின் 5 ஆண்டு ஆட்சி காலம் அடுத்த ஆண்டு(2018) மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன.

மாற்றத்திற்கான பயணம் என்ற பெயரில் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பயணத்தை தொடங்கியுள்ளார். அதே போல் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியும் ‘குமாரபர்வா‘ என்ற பெயரில் பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு போட்டியாக ஆளும் முதல்-மந்திரி சித்தராமையா சூறாவளி சுற்றுப்பயணத்தை வருகிற 13-ந் தேதி பீதரில் தொடங்க முடிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்