மேட்டூரில் பட்டப்பகலில் பயங்கரம்: தையல் தொழிலாளி குத்திக்கொலை

மேட்டூரில் பட்டப்பகலில் தையல் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-12-03 21:15 GMT

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காவிரி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் தீபக் என்ற தருண்வர்‌ஷன் (வயது 21), தையல் தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் மோட்டார்சைக்கிளில் மாதையன்குட்டைக்கு வந்தார்.

இதன்பின்னர் மாதையன்குட்டை பஸ்நிறுத்தம் அருகே தீபக் நின்று கொண்டிருந்தார். அங்கு அவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீபக் கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் சென்ற தீபக் எப்படி கொலை செய்யப்பட்டார், காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். தகவல் அறிந்ததும் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்