மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவ–மாணவிகள் 6–வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
மருத்துவக்கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றிவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் 6–வது நாளாக நேற்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.