நம்பியாற்றின் குறுக்கே இடித்து விழுந்த பாலத்தை உடனடியாக அரசு கட்டி தர வேண்டும் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
நம்பியாற்றின் குறுக்கே இடித்து விழுந்த பாலத்தை உடனடியாக கட்டித்தர வேண்டும் என என வசந்தகுமார் எம்.எல்.எ. கோரிக்கை விடுத்துள்ளார்.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் தொகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை வசந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டார். நம்பியாற்றின் குறுக்கே ஆவரந்தலையில் இருந்து தளவாய்புரம் செல்லம் வழியில் உள்ள இணைப்பு பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த பாலத்தை வசந்தகுமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
நம்பியாற்றின் குறுக்கே ஆவரந்தலையில் கடந்த ஆண்டு பாலம் கட்டப்பட்டு உள்ளது. பாலம் கட்டி 15 மாதங்கள் ஆகின்றன. சமீபத்தில் பெய்த கனமழையால் பாலத்தின் ஒரு பகுதியில் இடிந்துள்ளது. குறைவான தரத்தில் பாலம் கட்டப்பட்டு உள்ளதால், பாலம் இடித்துள்ளது. இந்த பாலத்தை கட்டிய காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் போர்க்கால அடிப்படையில் இந்த பாலத்தை கட்டித்தர வேண்டும். இந்த இணைப்பு பாலம் மூலம் பள்ளிக்கூட மாணவ–மாணவிகள், வியாபாரிகள், பொது மக்கள் இரு புறமும் சென்று வருகிறார்கள். இந்த பாலம் இல்லையென்றால், சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனஅவ இந்த பாலத்தை உடனடியான அரசு கட்டி தர வேண்டும்.
இவ்வாறு வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.