பிளாஸ்ட்டிக்கை தடை செய்ய அரசு திட்டம் வகுக்கிறது முதல்–மந்திரி பேச்சு
2017–ம் ஆண்டிற்கான தேசிய சுற்றுசூழல் மாநாடு மும்பையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:–
மும்பை,
சுற்றுச்சூழலை சிறப்பான வகையில் மேம்படுத்துவதற்கு மராட்டிய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூ£லை அதிகம் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு மாற்றாக சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களை பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
அதேபோல் கடல் அசுத்தமாகாமல் இருக்க கழிவுநீர் கடலில் கலப்பதற்கு முன் அதை சுத்திகரித்து கடலில் விட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். இந்த மாநாட்டில் மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர், மந்திரிகள் ராம்தாஸ் கதம், தீபக் கேசர்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.