நீலமங்கலம் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேற்றம்
நீலமங்கலம் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து மணல் மூட்டைகளை கொண்டு அடைக்கப்பட்டது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு பெய்த அடைமழையின் காரணமாக குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள நீலமங்கலம் ஏரி முழுமையாக நிரம்பியது. இந்த ஏரி சுமார் 90 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென நீலமங்கலம் ஏரிக்கரை உடைந்து ஏரியில் இருந்த தண்ணீர் அருகே உள்ள வயல்வெளி பகுதியில் சென்று கொண்டிருந்தது.
இதனை நேற்று காலையில் பார்த்த நீலமங்கலம் பகுதி மக்கள், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் என்.டி.கற்பகம் சுந்தருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். நீலமங்கலம் கிராம மக்கள் மற்றும் 60 பணியாட்களை வைத்து ஏரி கரை உடைந்த பகுதியில் மரம், செடி, கொடிகளை வெட்டி போட்டு தண்ணீர் வெளியேறும் வேகத்தை கட்டுப்படுத்தினர். இதனையடுத்து ஏரி கரை உடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் முழுமையாக வெளியேறுவதை தடுத்தனர்.
உடைந்த ஏரி கரையை குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து பார்வையிட்டார்.