திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 11–ந்தேதி தொடங்குகிறது

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 11–ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 9–ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Update: 2017-12-02 20:30 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 11–ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 9–ந்தேதி வரை நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகள் (குரூப்–4) பதவிக்கான எழுத்துத்தேர்வு 11.2.2018 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வருகிற (டிசம்பர்) 13–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இத்தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 11–ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 9–ந்தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது.

தங்கும் வசதி

இந்த பயிற்சி வகுப்பில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் தமிழ்மொழி வாயிலாக மட்டும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது. பயிற்சி கட்டணம் ரூ.7 ஆயிரத்து 500 ஆகும்.

பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பில் சேர...

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாள் 11.12.2017 அன்று நேரில் செலுத்த வேண்டும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் திருச்செந்தூர்–தூத்துக்குடி சாலையில் உள்ள சிவந்தி அகாடமியில் ரூ.7,500–ஐ 11–ந்தேதி காலை 9 மணிக்கு நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டது.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்கள் அறிய 04639–242998 மற்றும் 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்