முத்தையாபுரத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆய்வு

முத்தையாபுரத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2017-12-02 21:00 GMT

ஸ்பிக்நகர்,

முத்தையாபுரத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

பலத்த மழை

வங்க கடலில் உருவான ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யனார் கோவில் தெருவில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து அந்த பகுதி தெருக்களில் தேங்கி உள்ளது. மேலும் முத்தையாபுரம் தோப்பு தெரு அருகே உள்ள பெரியார் நகரில் சாலை வசதி இல்லாததால் அங்கு மழைநீர் அதிகளவில் தேங்கி கிடக்கிறது.

கீதாஜீவன் எம்.எல்.ஏ.

இந்த நிலையில் நேற்று காலையில், கீதாஜீவன் எம்.எல்.ஏ. முத்தையாபுரத்தில் மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தோப்பு தெரு அருகே உள்ள பெரியார்நகரில் தனது எம்.எல்.ஏ. நிதியில் இருந்து புதிதாக சாலை அமைத்து தருவதாக கூறினார். பின்னர், அய்யனார் கோவில் தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகளிடம் கூறினார். அதன்படி சுகாதார துறை அதிகாரிகள் தலைமையில், பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து லாரிகள் மூலம் அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. கூறினார். அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள், ஊர் பெரியவர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்