மாற்றுத்திறனாளிகள் தினவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நாராயணசாமி தலைமையில் நடந்தது

புதுவையில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நாளை ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற உள்ளது.

Update: 2017-12-01 22:15 GMT

புதுச்சேரி,

புதுவையில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற உள்ளது. விழாவில் சபாநாயகர், முதல்–அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் இந்த விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சமூக நலத்துறை செயலாளர் மிகிர்வர்தன், இயக்குனர் சாரங்கபாணி மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க அரசு சார்பில் வழங்கப்படும் கடன் தொகையை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்