கார்–மொபட் மொதல்: கோவில் பூசாரி சாவு

சத்தியமங்கலம் அருகே உள்ள டி.ஜி.புதூரை சேர்ந்தவர் குப்புசாமி கருவண்ணராயர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார்.

Update: 2017-12-01 21:00 GMT

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே உள்ள டி.ஜி.புதூரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 58). கெஜலட்டியில் உள்ள கருவண்ணராயர் கோவில் பூசாரியாக இருந்து வந்தார். நேற்று பகல் 12 மணி அளவில் குப்புசாமி மொபட்டில் டி.ஜி.புதூரில் இருந்து அரியப்பம்பாளையத்துக்கு மொபட்டில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே ஒரு கார் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் காரும்–மொபட்டும் மொதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த குப்புசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் குப்புசாமி நேற்று மாலை இறந்துவிட்டார். இதுகுறித்து சத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிவந்த கொளப்பலூரை சேர்ந்த பாலுசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த குப்புசாமிக்கு வாசுகி (54) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்