மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவ, மாணவிகள் 4–வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2017-12-01 21:30 GMT

திருச்சி,

மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 இதைத்தொடர்ந்து திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி முதுநிலை மாணவ, மாணவிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 4–வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்