கந்து வட்டி கொடுமை:பெண் தூக்குப்போட்டு தற்கொலை

மதுரை பழைய விளாங்குடியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் அதே பகுதியை சேர்ந்த இரு பெண்களிடம் வட்டிக்கு கடன் வாங்கினார்.

Update: 2017-12-01 21:15 GMT

மதுரை,

மதுரை பழைய விளாங்குடியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி மாரீஸ்வரி(வயது 29). இவர் அதே பகுதியை சேர்ந்த அவ்வையார், தங்கம் ஆகிய இரு பெண்களிடம் வட்டிக்கு கடன் வாங்கினார். இந்தநிலையில் மாரீஸ்வரி 2 மாதங்களாக வட்டி கட்டவில்லை. இதனையடுத்து மாரீஸ்வரியின் வீட்டுக்கு வந்த இரு பெண்களும், வட்டி கேட்டு தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த மாரீஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் இறந்தார். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மாரீஸ்வரி தற்கொலை சம்பவத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்