கொடுமுடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மரக்கடை உரிமையாளர் பலி

கொடுமுடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மரக்கடை உரிமையாளர் பலியானார்.;

Update: 2017-11-30 22:15 GMT

கொடுமுடி,

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் தளுவம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியநாராயணன். (வயது 37). கொடுமுடி புது பஸ்நிலையம் அருகே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

கடந்த 22–ந் தேதி சத்தியநாராயணனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்£த்தபோது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சத்தியநாராயணன் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 28–ந் தேதி இரவு சத்தியநாராயணன் இறந்துவிட்டார். அதன்பின்னர் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த சத்தியநாராயணனுக்கு ஈஸ்வரி (32) என்ற மனைவியும், ஸ்ரீசஷ்டிகன் (7) என்ற மகனும், ஸ்ரீவத்ஸன் என்ற 9 மாதமே ஆன ஆண் குழந்தையும் உள்ளனர்.

சத்தியநாராயணனின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன் சாலைப்புதூரை சேர்ந்த ஒரு வாலிபரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

மேலும் செய்திகள்