மொடக்குறிச்சியில் தமிழக அரசை கண்டித்து தி.மு.க. பொதுக்கூட்டம்

மொடக்குறிச்சியில் தமிழக அரசை கண்டித்து தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2017-11-30 22:30 GMT

மொடக்குறிச்சி,

தமிழக அரசை கண்டித்து மொடக்குறிச்சியில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மொடக்குறிச்சி ஒன்றிய தி.மு.க செயலாளர் சு.குணசேகரன் தலைமை தாங்கினார்.

கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி என்.சிவா, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து பேசினார்கள்.

கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் எம்.கந்தசாமி, மாநில ஆதி திராவிடர் நலக்குழு செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ், மாநில கொள்கைபரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக நிர்வாகிகள் கே.குமார்முருகேஸ், என்.டி.பத்மநாபன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கட்சியின் பேரூர் செயலாளர் பி.வி.சரவணன் வரவேற்று பேசினார். முடிவில் துணை செயலாளர் கே.குப்புசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்