கிரிவலப் பாதையில் உள்ள மாட்டு சந்தையை கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) ஏற்றப்படுகிறது.
விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக 16 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பாரம்பரியமாக தீபத் திருவிழாவின் போது நடைபெறும் குதிரை சந்தை மற்றும் மாட்டு சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவை செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி 16 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கிரிவலப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் குதிரை சந்தை, மாட்டு சந்தை அமைக்கப்பட்டு உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.