கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு கத்திக்குத்து
கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
எர்ணாகுளம்,
உடனே கண்டக்டர் பிஜித் என்பவர் மாணவர்களை பின்புறமாக ஏறுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், கண்டக்டருடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அது மோதலாக மாறியது. இதில் பஸ் டிரைவர் அஜித் (29), கண்டக்டர் பிஜித், ஊழியர் அப்துல்தாகிர் ஆகியோர் சேர்ந்து மாணவர்கள் 7 பேரையும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த மாணவர்கள் 7 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கண்டக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.