ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த இந்தி நடிகர் போலீஸ் எச்சரிக்கை
நடுரோட்டில் காரில் வெளியே தலையை நீட்டியபடி ரசிகையுடன் ‘செல்பி’ எடுத்த நடிகர் வருண் தவானுக்கு மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
மும்பை,

ரசிகையுடன் ‘செல்பி’
மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் வருண் தவான். இவர் காரில் பயணம் செய்யும் போது, தனது தலையை வெளியே நீட்டியபடி அருகில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு ரசிகையுடன் ‘செல்பி’ எடுத்து உள்ளார். இதை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர் யாரோ படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மும்பை போலீஸ் நடிகர் வருண் தவானை டுவிட்டரில் எச்சரித்து உள்ளது. அந்த பதிவில், இதுபோன்ற ஆபத்தான சாகசத்தை வெள்ளித்திரையில் செய்து கொள்ளுங்கள். சாலையில் வேண்டாம். இது உங்களுக்கும், ரசிகர்களுக்கும், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து. உங்கள் வீடு தேடி செல்லான் வந்து கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மன்னிப்பு கேட்டார்
மும்பை போலீசின் இந்த டுவிட்டர் எச்சரிக்கையை தொடர்ந்து, நடிகர் வருண் தவான் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘கார் இயக்கத்தில் இருக்கும் போது நான் ‘செல்பி’ எடுக்கவில்லை. சிக்னலில் நின்றபோது தான் எடுத்தேன். எனது ரசிகையின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தான் இப்படி நடந்து கொண்டேன். இனி இதுபோன்ற செயலுக்கு ஊக்கம் அளிக்க மாட்டேன். பாதுகாப்பை மனதில் வைத்து கொள்வேன்’ என தெரிவித்து உள்ளார்.