சர்ச்கேட்– விரார் இடையே 7 இடங்களில் ஏ.சி. மின்சார ரெயில் நிற்கும் ரெயில்வே அதிகாரி தகவல்

சர்ச்கேட்– விரார் இடையே 7 இடங்களில் ஏ.சி. மின்சார ரெயில் நிற்கும் என மேற்கு ரெயில்வே அதிகாரி கூறினார். 7 இடங்களில் நிற்கும் மும்பை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ள ஏ.சி. மின்சார ரெயில் சேவை வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என ரெயில்வே மந்த

Update: 2017-11-23 22:01 GMT

மும்பை,

சர்ச்கேட்– விரார் இடையே 7 இடங்களில் ஏ.சி. மின்சார ரெயில் நிற்கும் என மேற்கு ரெயில்வே அதிகாரி கூறினார்.

7 இடங்களில் நிற்கும்

மும்பை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ள ஏ.சி. மின்சார ரெயில் சேவை வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்தநிலையில் ஜனவரி மாதம் ஏ.சி. ரெயில் சேவையை தொடங்கும் பணிகளில் மேற்கு ரெயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஏ.சி. மின்சார ரெயில் சர்ச்கேட்– விரார் இடையே இயக்கப்பட உள்ளது.

முதலில் இந்த ரெயில் தினமும் சர்ச்கேட்– விரார் இடையே 4 முறை மட்டும் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ரெயில் வசாய், பயந்தர், போரிவிலி, அந்தேரி, பாந்திரா, தாதர் மற்றும் மும்பை சென்ட்ரல் ஆகிய 7 ரெயில்நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்பட உள்ளது.

40 வினாடிகள்

இது குறித்து மேற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வழக்கமாக ரெயில்கள் 25 முதல் 30 வினாடிகள் வரை ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும். ஏ.சி. மின்சார ரெயில்களில் தானியங்கி கதவுகள் இருப்பதால் அதை திறந்து மூட கூடுதல் வினாடிகள் தேவைப்படும். அதாவது ஏ.சி. மின்சார ரெயில்கள் 40 வினாடிகள் வரை ஒரு ரெயில்நிலையத்தில் நிறுத்தப்படும். கூடுதல் நேரமாவதால் தற்போது ஏ.சி. மின்சார ரெயிலை 7 ரெயில் நிலையங்களில் மட்டும் நிறுத்த முடிவு செய்து உள்ளோம்’’ என்றார்.

இதேபோல ஏ.சி. மின்சார ரெயிலில் 2 டிக்கெட் பரிசோதகர்களை பணியில் ஈடுபடுத்தவும் ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஏ.சி. மின்சார ரெயிலில் பெல், ஐ.சி.எப். நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் பயணம் செய்வார்கள் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்