தொழில் அதிபர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
வாணியம்பாடியில் தொழில் அதிபர் வீட்டில் 25 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 60), தொழில் அதிபர். இவர், தனது மனைவியுடன் நேற்று முன்தினம் இரவு உறவினரை பார்க்க கொல்லத்தெருவிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை பதிவு செய்தனர். திருட்டுபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4½ லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.