கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி நேற்று கோவை மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட்டனர். பின்னர் பணி செய்யாமல் அங்குள்ள அறையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-
கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போது இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி சென்னையில் பேரணி நடத்தி முதல்- அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.