கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பெண்ணையாற்று தடுப்பணை பாதையை திறந்து விடக்கோரி போராட்டம்
பெண்ணையாற்று தடுப்பணை பாதையை திறந்து விடக்கோரி கிராம மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று திடீரென போராட்டம் நடத்தினார்கள்.
கடலூர்,
கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே பெண்ணையாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை வழியாக புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த கொமந்தான்மேடு, சின்ன ஆராய்ச்சிக்குப்பம், பெரிய ஆராய்ச்சிக்குப்பம், மேல்பரிக்கல்பட்டு, கீழ் பரிக்கல் பட்டு, பாகூர் உள்ளிட்ட கிராமங்களைச்சேர்ந்த மாணவர்கள் படிப்பதற்காகவும், தொழிலாளர்கள் வேலைக்காகவும் கடலூருக்கு வந்து சென்றனர்.
அதேப்போல் கடலூரைச்சேர்ந்த மதுப்பிரியர்கள் தடுப்பணை வழியாக கொமந்தான்மேட்டில் இருந்த மதுக்கடைக்கு சென்று மது அருந்தி விட்டு வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்தனர்.
மதுப்பிரியர்கள் மதுக்குடித்து விட்டு தடுப்பணை வழியாக வரும் போது ஆற்றில் தவறி விழுந்து பலியான துயர சம்பவங்கள் நடந்தன.
சமீபத்தில் கடலூர் குப்பன் குளத்தைச்சேர்ந்த டிரைவர் தேவராஜ் என்பவர் குளிப்பதற்காக தடுப்பணையில் இருந்து ஆற்றுக்குள் குதித்த போது, தலையில் அடிபட்டு பரிதாபமாக செத்தார்.
இந்த சம்பவத்தைத்தொடர்ந்து தடுப்பணை வழியாக பொதுமக்கள் செல்ல கடலூர் போலீசார் தடை விதித்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ரோட்டில் இருந்து தடுப்பணைக்கு செல்லும் வழியின் குறுக்கே மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தடுப்பணைக்கு முன்பு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தை மூடி, பாதையை திறந்து விடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக கொமந்தான்மேடு கிராம மக்கள் நேற்று காலையில் தடுப்பணை வழியாக ஊர்வலமாக திரண்டு வந்தனர். அவர்கள் தடுப்பணை முன்பு தோண்டப்பட்டு உள்ள பள்ளத்துக்குள் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விட்டு மனு கொடுப்பதற்காக 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேயை சந்தித்து மனு கொடுத்து விட்டு திரும்பி சென்றனர்.
முன்னதாக கிராம மக்கள் கூறுகையில், கொமந்தான்மேட்டில் முன்பு மதுக்கடை இருந்ததால், மதுக்குடிப்பதற்காக தடுப்பணை வழியாக வருகிறார்கள் என்று தடுப்பணையை யாரும் பயன்படுத்தக்கூடாதபடி போலீசார் இரும்பு கம்பியால் தடுப்பு வேலி அமைத்தனர். அதனால் கொமந்தான்மேட்டில் இருந்த மதுக்கடை உரிமத்தை புதுச்சேரி அரசு ரத்து செய்தது. அதன்பிறகு தடுப்பணையை பயன்படுத்த அனுமதித் தனர். இப்போது மீண்டும் தடுப்பணையை பயன்படுத்த தடை விதித்து உள்ளதால் புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தடுப்பணையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விட வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தினோம். எங்கள் கோரிக்கையை பரிவுடன் கேட்ட கலெக்டர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கலந்து பேசி விட்டு நல்ல முடிவை தெரிவிப்பதாக கூறினார் என்றனர்.