கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் யூனியன் அலுவலக வளாகங்களில் உள்ளிருப்பு போராட்டம்

கோவில்பட்டி, திருச்செந்தூர் பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2017-11-23 23:00 GMT
கோவில்பட்டி,

பஞ்சாயத்து செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அனைத்து யூனியன் அலுவலக வளாகங்களில் பஞ்சாயத்து செயலாளர்கள், யூனியன் அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் யூனியன் ஆணையாளர் மோகன், கூடுதல் ஆணையாளர் பால அரிகரமோகன், மேலாளர் சசிகுமார், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமகிருஷ்ணன், சிவபாலன், சீனிவாசன், பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லாததால் வெறிச்சோடியது. பல்வேறு தேவைகளுக்காக யூனியன் அலுவலகத்துக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கயத்தாறு யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் யூனியன் ஆணையாளர் வேலுமயில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் மகேந்திரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கம் முருகேசன், காசிராஜன், அருணா சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதூர் யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பத்மநாபன், ராஜமுருகேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க வட்டார தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் யூனியன் ஆணையாளர்கள் நாகராஜன், சுப்பிரமணியன், துணை ஆணையாளர் ரஞ்சித், அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் சுவாமிநாதன், பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை பஞ்சாயத்து யூனியன் பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் மரிய அந்தோணி ரூஸ்வேல்டு தலைமை தாங்கினார். பஞ்சாயத்து  செயலாளர்கள் சங்க மாநில துணை தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். போராட்டத்தை பஞ்சாயத்து செயலாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் வேல்முருகன் தொடங்கி வைத்து, கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.  இந்த போராட்டத்தில், பஞ்சாயத்து செயலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கசாலி மரைக்காயர், மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, பஞ்சாயத்து யூனியன் பணியாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் நாராயணன் உள்பட ஓட்டப்பிடாரம் யூனியனுக்கு உட் பட்ட பஞ்சாயத்து செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம் யூனியன் அலுவலக வளாகங்களிலும் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லாததால், யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடின.

மேலும் செய்திகள்